பர்பானி மாவட்டத்தில் 900 கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதையடுத்து மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முகிலிகர் கூறுகையில்,
பர்பானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் திடீரென கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவைக் காய்ச்சல் காரணமாகவே கோழிகள் உயிரிழந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் உள்ள 8 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிய நிலையில், தற்போது மகாராஷ்டிரத்திலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்குள் எந்தொரு பறவையும் கொண்டு வருவதற்கோ, கொண்டு செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மருத்துவக் குழுவினர் முரும்பா கிராமத்தில் முகாமிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! மாலை நிலவரம்!
மிதுனம் - இன்றைய ராசி பலன் (02.07.2026)

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ. 95.23 ஆக நிறைவு!

மு.க. ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம்! அமைச்சர் நிர்மல் குமார் கடும் விமர்சனம்!
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS



