தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! மாலை நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்துள்ளது குறித்து...

News image

தங்கம் விலை - படம்: IANS

Updated On :1 ஜூலை 2026, 5:59 pm IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 1) மாலை நிலவரப்படி ரூ. 1200 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு தங்கம் விலை தினமும் நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாள்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70-ம், சவரன் ரூ. 560-ம் குறைந்தது. அதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160-ம் கிராமுக்கு ரூ. 270-ம் அதிரடியாக குறைந்தது. ஒரு சவரன் ரூ. 1,04,240-க்கும், ஒரு கிராம் ரூ.13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பிற்பகலில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து, ரூ. 1,05,600-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 13,200-க்கு விற்பனையானது.

இதையடுத்து, இன்று காலை (ஜூலை 1, புதன்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 13,100 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 13,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

As of this evening (July 1), the price of ornamental gold in Chennai has risen by Rs. 1,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.