சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயில் மற்றும் சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அனுமன் ஜயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சனேய சுவாமிக்கு மூலம் நட்சத்திரம், அனுமன் ஜயந்தியையொட்டி பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் பூக்கள், வெற்றிலை, வடை, பல்வேறு பழவகைகளைக் கொண்டு அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி மலையில் 4-வது மண்டபத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சனேயர் சுவாமிக்கு மூல நட்சத்திரம், அனுமன் ஜயந்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
இதில் வடுகப்பட்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

சங்ககிரி மலையில் 4வது மண்டபத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சனேயர் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.
சங்ககிரி மலையில்..
சங்ககிரி மலை உச்சிக்கு செல்லும் வழியில் 4வது மண்டபத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜயந்தியையொட்டி பல்வேறு திவ்யப்பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

முதியவா் மீது தாக்குதல்: தொழிலாளி கைது






