மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News image

அமராவதி அணை

Updated On :13 ஜனவரி 2021, 8:23 am IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கடந்த 3 மாதத்தில் நான்கு முறை அணை முழு கொள்ளளவை எட்டியது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீர்மட்டம் 89.50 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு உள்வரத்தாக வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நீர்ப்பிடிப்பு பகுதியில் மிக கனமழை பெய்தது. இரவு 8 மணி அளவில் அணைக்கு  சுமார் 8000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை பகுதியில் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.