பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

நெல்லையில் 150 வீடுகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம்

திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, திருநெல்வேலி மாநகர் பகுதியில் தாமிரவருணி கரையோரம் உள்ள 150 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

News image

நெல்லையில் 150 வீடுகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம்

Updated On :13 ஜனவரி 2021, 12:05 pm IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, திருநெல்வேலி மாநகர் பகுதியில் தாமிரவருணி கரையோரம் உள்ள 150 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

Story image

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அணைகளிலிருந்து 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து திருநெல்வேலி மாநகரப் பகுதி தாமிரவருணி ஆற்றில் சுமார் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியது.

Story image

இதனால் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது.

வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை காலையில் வெள்ளம் சூழ்ந்தது.

Story image

தீயணைப்பு வீரர்களும், வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்  மக்களை படகுகள் மூலம் மீட்டனர். மேலும் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.

படங்கள்: உ.ச.சாய்வெங்கடேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.