பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தஞ்சாவூர்: மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர்

தனியாா் பேருந்து உரசியதால் மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

News image

தஞ்சாவூர்: மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி- முதல்வர்

Updated On :13 ஜனவரி 2021, 3:06 pm IST

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையோர மின் கம்பி மீது தனியாா் பேருந்து உரசியதால் மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், நேற்று (12.1.2021) தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருவையாறு வட்டம், நடுக்காவேரி சரகம், வரகூர் மெயின் ரோடு அருகே, மின் கம்பி மீது உரசி, மின்சாரம் தாக்கியதில், பேருந்தில் பயணம் செய்த, கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கணேசன், வரகூரைச் சேர்ந்த ராமாமிர்தம் மகன்கல்யாணராமன், மணிகண்டன்  மனைவி கௌசல்யா மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு மகன் நடராஜன் ஆகிய நான்கு நபர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்து குறித்து அறிந்திடவும் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன்.

இந்த விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.