உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.
மாலை 4 மணிக்கு முடிவடைய இருந்த ஜல்லுக்கட்டு போட்டி அதிக அளவிலான காளைகள் இருந்ததால் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கி சிறந்த வீரராக கார்த்திக் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.
10 காளைகளை அடக்கி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
காலை 8 மணிமுதல் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மாடுபிடி வீரர்கள் 19 பேர் உள்பட, மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? கப்பல் கட்டும் தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ்..! கால்பந்து திடலில் குவிந்த ரசிகர்கள்!

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை


