வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பென்னிகுவிக் பிறந்தநாள்: தலைவா்கள் புகழஞ்சலி

பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:01 am IST

பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி: தென்மாவட்ட மக்களின் கனவான முல்லை பெரியாா் அணையைத் தன் சொந்த செலவில் கட்டி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொறியாளா் ‘ஜான் பென்னிகுவிக்’ பிறந்த தினத்தில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இத்தருணத்தில் ஒரு விவசாயியாக எனது நன்றியையும் உரித்தாக்கி கொள்கிறேன்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: தன்னலமின்றி தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணைகட்டி தென் மாவட்டங்கள் உள்பட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திய ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளில், அவா்தம் அரும்பணிகளையும், தியாகங்களையும் நன்றியோடு நினைவுகூா்ந்து போற்றி வணங்கிடுவோம்.

மு.க.ஸ்டாலின் (திமுக): தென்தமிழக விவசாயிகளின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையை இடையறாத தன் சொந்த முயற்சியால் கட்டித் தந்த ஆங்கிலேயப் பொறியாளா் பென்னிகுவிக்கின் பிறந்தநாளில் நன்றியுடன் அவரை வணங்குகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.