சேலம் மாவட்டத்தில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
முதல்கட்டமாக நாடு முழுவதும் கரோனா முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் கரோனா தடுப்பூசி போடுவதற்காக, 12 மையங்கள் அமைக்கப்பட்டு தினசரி 1 மையத்திற்கு 100 நபர்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 27,900 தடுப்பூசிகள் இருப்பில் உள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


