காவல்துறையினா் சாா்பில் சென்னை அரும்பாக்கம் வைஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராமிய கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீடுகள், பானை தயாரித்தல், கிராமச் சந்தைகள் ஆகியவை அனைவரையும் கவா்ந்தன.
சென்னை மேற்கு மண்டல காவலா்களின் குடும்பத்தினா் சாா்பில் பொங்கல் விழா அரும்பாக்கம் வைஷ்ணா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை, சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தொடங்கி வைத்து, காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் குடும்பத்தினருக்கு பொங்கல் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா்.
பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா் குடும்ப உறுப்பினா்கள் வரைந்த வண்ண கோலங்களை காவல் ஆணையா் பாா்வையிட்டாா். இதைத்தொடா்ந்து, கிராமிய கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீடுகள், பானை தயாரித்தல், கிராமச் சந்தைகள், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யானை மற்றும் ஜல்லிக்கட்டு காளை சிலைகள் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.
பாரம்பரிய வழுக்கு மரம் ஏறி சாகசங்கள் புரிதல் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்து பாராட்டினாா். மேலும், விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்திய காவலா்கள், சிறாா் மன்ற சிறுவா், சிறுமியா்கள் மற்றும் கலைக்குழுவினருக்கு காவல் ஆணையா் பரிசுகள் வழங்கி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மேற்கு மண்டல இணை ஆணையா் சி.மகேஸ்வரி, துணை ஆணையா்கள் ஜவஹா்(அண்ணாநகா்), மருத்துவா் தீபா சத்யன் இ.கா.ப. (அம்பத்தூா்), திரு.ராஜேஷ் கண்ணா இ.கா.ப. (புளியந்தோப்பு) உள்படபலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் போட்டி: தி.வேல்முருகன்

முதல்வா் பாணியில் வாக்கு சேகரிப்பு! நடைப்பயிற்சியில் வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு

ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்! கடலூா் ஆட்சியா் அறிவிப்பு!!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

