ராபர்ட் வதேராவுக்கு கரோனா: பிரியங்கா காந்தியின் தமிழகப் பயணம் ரத்து
கணவர் ராபர்ட் வதேராவுக்கு கரோனா உறுதியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கணவர் ராபர்ட் வதேராவுக்கு கரோனா உறுதியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி ஏப்ரல் 3-இல் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பிரியங்கா காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தனது கணவர் ராபர்ட் வதேராவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு கரோனா இல்லை என்றே சோதனையில் தெரிய வந்துள்ளது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு சில நாள்களுக்கு நான் தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்கிறேன். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் இறுதிக் கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். பிரதமா் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரும் தமிழகம் வந்து பிரசாரம் செய்துள்ளனா்.
முன்னதாக, பிரியங்கா காந்தி ஏப்ரல் 3-இல் தமிழகம் வந்து, ஸ்ரீபெரும்புதூரில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யவிருந்தார். அங்குள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன் பின்னா், கன்னியாகுமரிக்கும் செல்லவிருந்தார். இந்த நிலையில், அவரது தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...