நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காட்பாடியில் தனியார் உணவகத்தில் திடீர் சோதனை: ரூ.18 லட்சம் பறிமுதல்;  8 பேரிடம் விசாரணை

காட்பாடியில் காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ18.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

Updated On :2 ஏப்ரல் 2021, 5:16 am

DIN


வேலூர்: காட்பாடியில் காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ18.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு வழங்க பணம், பரிசுப் பொருள்கள், மதுவகைகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இதையொட்டி, காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தவிர,  சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள், வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.  கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுகவினர்‌ 8 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.