கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், நான் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என்று சொல்வதைவிட நம் நாட்டின் பெருமையை உடலில் எடுத்துக் கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற வருடம் இதே நாள் தடுப்பூசி கிடைக்காதா? என்று ஏங்கி கொண்டிருந்த நேரத்தில் நம் நாட்டிலேயே தயாரித்து 6 கோடி பேருக்கு செலுத்திய பெருமை நம் நாட்டையே சேரும்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனா முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். மேலும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்துள்ளேன்.
அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எந்தவித அச்சமின்றி கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...