மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பெரியகுளம் பகுதியில் சூறைக்காற்று: வாழைகள் நாசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை வீசி சூறை காற்றுடன் பெய்த மழையில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்து வாழைகள் சேதமடைந்துள்ளது. 

News image
பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை வீசி சூறை காற்றுடன் பெய்த மழையில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்து வாழைகள் சேதமடைந்துள்ளது. 
Updated On :2 ஏப்ரல் 2021, 6:30 am

DIN


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை வீசி சூறை காற்றுடன் பெய்த மழையில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்து வாழைகள் சேதமடைந்துள்ளது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி,  சக்கரைபட்டி, சாவடிபட்டி, வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதியில் வியாழக்கிழமை மாலையில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை பெய்தது. சூறவாளி காற்றில்  200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல இலட்சம் மதிப்பிலான சுமார் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முற்றிலும் ஒடிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பிச்சைமணி  தெரிவித்ததாவது: 
வங்கிகளில் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து பயிரிட்ட வாழை பிஞ்சு பருவம் மற்றும் பூவாக உள்ள நிலையில் சூறாவளி காற்றினால் முற்றிலும் முடிந்து சேதமடைந்துள்ளதால், உரிய நிவராணம் வழங்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.