அமைச்சர்கள் தொகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா!
அதிமுக அமைச்சர்கள் தொகுதிகளில் பணப்பட்டுவாடா பணியில் ஈடுபட்டுவர்களை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிமுக அமைச்சர்கள் தொகுதிகளில் பணப்பட்டுவாடா பணியில் ஈடுபட்டுவர்களை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரு நாளே உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணையாக, தேர்தல் அதிகாரிகளும் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வகையில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்து வரும் அதிமுகவினரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிடும் ஆவடி தொகுதியின், ஆவடி வீட்டுவசதி குடியிருப்பில் வாக்காளர்கள் பட்டியலுடன் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் சரஸ்வதி, அம்சவேணி, பிரேம் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த வாக்காளர்கள் பட்டியல், ரூ.1.5 லட்சம் பணத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க் மேலாளர் தனசேகரிடம் இருந்து ரூ.11.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியிலும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் போடி அருகே மாட்டுமந்தையில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்ரஞ்சனை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா செய்வதற்காக சித்ரஞ்சன் கையில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...