கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக
தமிழகத்தில் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.


சென்னை: தமிழகத்தில் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொளத்தூர், திருச்சி மேற்கு, காட்பாடி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. இணையதளத்தில் வாக்குச்சாவடியை அறியும் வசதி
ளத்தூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் அளிக்கப்பட்டக் கடிதம்

கொளத்தூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் அளிக்கப்பட்டக் கடிதம்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், கொளத்தூர், திருவண்ணாமைலை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, காட்பாடி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுக பணப்பட்டுவாடா செய்துள்ளது. எனவெ இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விருப்ப வெறுப்பின்றி செயல்பட வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...