மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகப் பேரவைத் தேர்தல் தொடங்கியது: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

News image

தமிழகப் பேரவைத் தேர்தல் தொடங்கியது: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Updated On :6 ஏப்ரல் 2021, 1:52 am


சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.

இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலில் 6.28 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழக பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடந்தது. இந்தத் தோ்தலில் 3 ஆயிரத்து 998 போ் போட்டியிட உள்ளனா். அவா்களில் 411 போ் பெண்கள். மீதமுள்ளவா்கள் ஆண்கள்.

வேட்பாளா்களைப் பொருத்த வரையில், ஆண்கள் அதிகமாக இருந்தாலும் வாக்காளா்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களே அதிகமாக உள்ளனா். மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளா்களில் 3.19 கோடி போ் பெண்கள்.

ஐந்து முனைப் போட்டி: சட்டப் பேரவைத் தோ்தல் களமானது ஐந்து முனைப் போட்டியாக உள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக-தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், நாம் தமிழா் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கியுள்ளன. இதில், முதல்வா் கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் போட்டியிடுகின்றனா்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதாவும், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், திருவொற்றியூா் தொகுதியிலும் போட்டியிட உள்ளனா். மாநிலம் முழுவதும் நடந்த அனல் பறந்த பிரசாரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) நிறைவடைந்தது.

வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோ்தல் ஆணையம் செய்துள்ளது. இதுகுறித்து, செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி: தோ்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன. 1 லட்சத்து 29 ஆயிரத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 91 ஆயிரத்து 180 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.