மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி: 9 தொகுதிகளில், 3,292 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3292 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

News image

திருச்சி: 9 தொகுதிகளில், 3,292 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

Updated On :6 ஏப்ரல் 2021, 2:30 am

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3292 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

Story image

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூர், லால்குடி ,முசிறி,  துறையூர் உள்ளிட்ட 9 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

Story image

  இந்தத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது இதற்காக 9 தொகுதிகளில் சேர்த்து மொத்தம் 32 92 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 159 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1490 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 11,35,780 ஆண், 12,02,728 பெண், 237 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 38 ஆயிரத்து 745  பேர் வாக்களிக்க உள்ளனர்.

16 ஆயிரம் பேர் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Story image

காலை 7 மணிக்கு தொடங்கி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 

காலை முதலே பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு பொது மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர்.

Story image

மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, தில்லை நகர் மக்கள் மன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Story image

திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி அஞ்சல் வாக்கை இன்று பதிவு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.