மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடலூரில் 3,001வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு துவங்கியது: 21.47 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 3,001 வாக்குச் சாவடிகளில் இன்று  காலை 7 மணிக்கு துவங்கியது. 

News image

கடலூரில் 3,001வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு துவங்கியது: 21.47 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்

Updated On :6 ஏப்ரல் 2021, 3:56 am

கடலூர்: தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 3,001 வாக்குச் சாவடிகளில் இன்று  காலை 7 மணிக்கு துவங்கியது. 

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம்136 பேர் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்வு செய்வதற்காக 21.47 லட்சம் பேர் களத்தில் உள்ளனர். 

இவர்களில் ஆண்கள் 10,57,478 பேர், பெண்கள் 10,89,569 பேர், இதரர் 248 பேர் மொத்தம் 21,47,295 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்கினை செலுத்துவதற்காக 3,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் செயல்படும். எனினும், மாலை 7 மணிக்கு முன்னதாக அதிகமானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தால் அவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு அவர்கள் வாக்களிக்கும் வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும், காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திட்டக்குடி தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 2,19,390 வாக்காளர்கள் 305 வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துகின்றனர். விருத்தாசலம் தொகுதியில் அதிகபட்சமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 2,52,844 வாக்காளர்கள் 355 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கின்றனர். நெய்வேலி தொகுதியில் 12 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில் 2,18,603 வாக்காளர்கள் 299 வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். பண்ருட்டி தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அவர்களைத் தேர்வு செய்வதற்காக 2,45,451 வாக்காளர்கள் 341 வாக்குச்சாவடிகளில் வாக்கினை பதிவு செய்ய உள்ளனர். கடலூர் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 2,39,372 வாக்காளர்கள் 343 வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்கினை செலுத்துகின்றனர். குறிஞ்சிப்பாடி தொகுதியில்12 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில் 2,43,164 வாக்காளர்கள் தங்களது வாக்கினை 336 வாக்குச்சாவடிகளில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனகிரி தொகுதியில்14 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 350 வாக்குச்சாவடிகளில் 2,48,517 பேர் தங்களது வாக்கினை செலுத்துகின்றனர். சிதம்பரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 11 மட்டுமே களம் காணும் நிலையில் 2,50,998 வாக்காளர்கள் தங்களது வாக்கினை 354 வாக்குச்சாவடிகளில் செலுத்துகின்றனர். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 318 வாக்குச்சாவடிகளில் 2,28,956 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.