கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் விடுக்கும் வேண்டுகோள்

தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அதிமுகவினருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமியும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

News image
அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் விடுக்கும் வேண்டுகோள்
Updated On :9 ஏப்ரல் 2021, 7:11 am

DIN


தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அதிமுகவினருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமியும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

இது குறித்து இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிமுகவும், அதிமுக அரசும், தன்னலம் கருதாமல் பொது நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவதிலும், மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுகவினர், பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், கடந்த சில நாள்களாக கரோனாவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியும், கரோனா தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, ஆங்காங்கே கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்குமாறும், மேற்கண்ட பணிகளை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.