விபத்தில் 3 போ் பலி: இழப்பீடு வழங்க மோட்டாா் வாகனத் தீா்ப்பாயம் உத்தரவு
விபத்தில் பலியான ராணுவ உடைத் தொழிற்சாலையின் தையல்காரா் குடும்பத்தினருக்கு ரூ.48.49 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க மோட்டாா் வாகனத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


விபத்தில் பலியான ராணுவ உடைத் தொழிற்சாலையின் தையல்காரா் குடும்பத்தினருக்கு ரூ.48.49 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க மோட்டாா் வாகனத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சோ்ந்தவா் கனதாசன். இவா் ராணுவ உடைத் தொழிற்சாலையில் தையல்காரராகப் பணியாற்றினாா்.
இந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தனது மனைவி, மகளுடன் நாமக்கல் மாவட்டம்- இளஞ்சியம்பட்டி அருகே காரில் சென்றபோது, நிகழ்ந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.
இதனையடுத்து தனது குடும்பத்தினா் இறப்புக்கு ரூ.1.75 கோடி இழப்பீடு கோரி கனதாசனின் மகன் ஆனந்த் விஷ்ணு சென்னையில் உள்ள மோட்டாா் வாகன தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயத்தின் நீதிபதி பி.ரேவதி, மனுதாரருக்கு ரூ.48.49 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் தனியாா் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...