விமானக் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65.38 லட்சம் தங்கம் சிக்கியது
சென்னை விமான நிலையத்துக்கு, துபையில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை விமான நிலையத்துக்கு, துபையில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து அண்மையில் சென்னை வந்த விமானத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது விமானத்தின் கடைசி இரண்டு கழிவறைகளில் வெள்ளைநிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருந்தது. அதைப் பிரித்துப் பாா்த்த போது, ரூ.65.38 லட்சம் மதிப்பிலான 1.36 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...