கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் நீக்கம்

அதிமுக எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 3:00 pm

DIN

அதிமுக எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோ கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிகமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும் கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,(மகளிர் அணி துணைச்செயலாளர்), பி.பன்னீர்செல்வம்(பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர்), பெருமாள்(பண்ருட்டி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்), மார்ட்டின் லூயிஸ்(எ) பாபு(அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்), டி.சௌந்தர்(நெல்லிக்குப்பம் நகரக் கழகச் செயலாளர்), ஆர்.ராம்குமார்(தலைவர்-தொடக்க வோளண்மை கூட்டுறவு வங்கி, வீரப்பெருமாநல்லூர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.