சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளருக்கு கரோனா தொற்று

நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.மாரிமுத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2021, 10:59 am

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.மாரிமுத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்புப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இதையொட்டி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அவரது மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.