நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தேனாம்பேட்டை, அண்ணா நகரில் பாதிப்பு 2,000-ஐத் தாண்டியது: சென்னையில் கரோனா நிலவரம்

சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது. 

News image

சென்னையில் கரோனா பாதிப்பு

Updated On :14 ஏப்ரல் 2021, 4:55 am

சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது. 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,673 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவுக்கு 4,337 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,69,614 பேர் பாதிக்கப்பட்டதில் 2,46,604 பேர் குணமடைந்துள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது. 

தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 2,109 பேரும், அதையடுத்து அண்ணா நகரில் 2,037 பேரும், கோடம்பாக்கத்தில் 1,708 பேரும், ராயபுரத்தில் 1,698 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.