பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காடையாம்பட்டியில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

காடையாம்பட்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. 

News image
Updated On :14 ஏப்ரல் 2021, 6:45 am

DIN

காடையாம்பட்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி என்று தீயணைப்பு வீரர்களின் சேவையை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் தீத்தொண்டு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் மு. இராஜசேகரன் மற்றும் பணியாளர்களால் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-14 அன்று நீத்தார் நினைவு நாளில் தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின்போது வீர மரணமடைந்த 33 துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக மலர் வளையம் வைத்தும் பிறகு இதுவரை உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒரு வார காலத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட உள்ளதாக காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மு.ராஜசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.