போடி வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்த பயிற்சி முகாம்
போடியில் வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.


போடியில் வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
கோடைக் காலம் என்பதால் வனப்பகுதியில் அடிக்கடி தீ பற்றி எரிவது வழக்கம். கடந்த 2018 ஆம் ஆண்டு கொழுக்குமலை வனப்பகுதியில் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் முதல் வனப்பகுதியில் தீப் பிடிக்காமல் தடுக்கவும், தீ பிடித்தால் உடனை அதனை அணைக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக வனப்பகுதியில் தீ பிடிக்கும்போது வன ஊழியர்கள் மட்டுமின்றி வன ஆர்வலர்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் போடி தீயணைப்பு நிலையத்தில் தேனி மாவட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சி.கல்யாணக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட உதவி அலுவலர் ஆர்.குமரேசன், தேனி வனச்சரக அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில் வனத்துறை ஊழியர்கள், வன ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களுக்கு தீயின் வகைகள், தீயணைப்பு சாதனங்களின் வகைகள், தீயைக் கட்டுப்படுத்தும் முறைகள், வனப்பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.
மேலும் தீயைக் கட்டுப்படுத்தி அணைப்பது குறித்து செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பு ஏற்பாடுகளை போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல், தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...