கணவனின் சித்திரவதையால் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: விசாரணை
திருவள்ளூரில் கணவனின் சித்திரவதையால் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


திருவள்ளூர்: கன்னியாகுமரி மாவட்டம், இட்டமொழி அடுத்த தர்மபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கட்டிடம் கட்டும் மேஸ்திரி.
இவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் சிவசத்தியா (வ 27). இவரை கன்னியாகுமரி மாவட்டம் இறைச்சிகுளத்தை சேர்ந்த மகேஷ் வயது (வ 30) என்பவருக்கு 19.5.2015 முறைப்படி திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
திருவள்ளூர், ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மகேஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூரில் ஏசி மெக்கானிக் ரிப்பேர் செய்யும் ஏஜெண்டாக உள்ளார்.
இந்த நிலையில் சிவசத்தியாவை அவரது கணவர் மகேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள் போதுமானதாக இல்லை என்றும், திருமணம் ஆன நாள் முதல் பணம் மற்றும் நகைகள் வாங்கி வருமாறு சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
மேலும் மகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததை சிவசத்தியா கேட்டதற்கு மகேஷ் அவரை துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிவசத்தி நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவசத்தியாவின் தந்தை ராஜ்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் தனது மகளை சித்திரவதை செய்து தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மகேஷ் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து மகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகியுள்ளது வரதட்சணை கொடுமையா என திருவள்ளூர் ஆர்டிஓ ப்ரீத்தி பார்கவி விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...