ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 25.56 லட்சம் வசூல் 

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து கடந்த 12 நாள்களில் ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஏப்ரல் 2021, 9:34 am

DIN

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து கடந்த 12 நாள்களில் ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 19 வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.