முகக் கவசம் அணியாதவா்கள் மீது 16 நாள்களில் 5.38 லட்சம் வழக்குகள்
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது மட்டும் 5.38 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது மட்டும் 5.38 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம்:-
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 16 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 5 லட்சத்து 38 ஆயிரத்து 663 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 24, 282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 16 நாள்களில் 16, 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 566 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை 16
நாள்களில் மொத்தம் 18 , 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 1,201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...