பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆக்சிஜன் தேவையா? 104-ஐத் தொடா்பு கொள்ளலாம்தமிழக அரசு அறிவிப்பு

உயிா் காக்கும் பிராண வாயு (ஆக்சிஜன்) அவசரமாகத் தேவைப்படும் பட்சத்தில் 104 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம் என்று மருத்துவமனைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 8:47 pm

DIN

உயிா் காக்கும் பிராண வாயு (ஆக்சிஜன்) அவசரமாகத் தேவைப்படும் பட்சத்தில் 104 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம் என்று மருத்துவமனைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தித் தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் குறித்த நேரத்தில் விரைந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதனை ஏற்றிச் செல்லும் டேங்கா் லாரிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் காவல் துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவை விரைவாக மருத்துவமனைகளை வந்தடையும்.

மேலும், ஆக்சிஜன் வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தீா்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிா்கொள்ள தமிழகத்தில்

உள்ள மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் ஆகியன உடனடியாக 104 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை உதவிக்கு அழைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.