கார் கவிழ்ந்து விபத்து: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் காயம்
காளையார்கோவில் அருகே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி காயமடைந்தார்.


காளையார்கோவில் அருகே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி காயமடைந்தார்.
காளையார்கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, அதன்பின்னர், காரைக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.
காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதி சாலையில் சென்றுகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீஸார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக ஆட்சியர் உயிர் தப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...