ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகையை மீட்டுத்தந்த ரயில்வே அதிகாரிகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகையை, தவறவிட்ட பயணியிடம் ரயில்வே அதிகாரிகள் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.

ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகையை மீட்டுத்தந்த ரயில்வே அதிகாரிகள்

ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகையை மீட்டுத்தந்த ரயில்வே அதிகாரிகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயிலில் தவறவிட்ட 18 பவுன் நகையை, தவறவிட்ட பயணியிடம் ரயில்வே அதிகாரிகள் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயிலில் சென்னையிலிருந்து சிவகாசி வரை பயணம் செய்து வந்த ஜீவானந்தம் குடும்பத்தின் 5 பேர் பயணம் செய்த நிலையில் சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கும் போது தாங்கள் கொண்டு வந்த டிராவல் பேக் ஒன்றை தனது இருக்கையில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார்கள்.
பின்பு ரயில் புறப்பட்ட நிலையில் உடனே சிவகாசி ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் சொல்லி அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன்பேரில் பணியிலிருந்த ரயில்வே ஊழியர் ஜெயலட்சுமி மற்றும் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் அலுவலராக இருந்த சார்பு ஆய்வாளர் திரு.விஜயன் பெண் தலைமைக் காவலர் மல்லிகா, முதல்நிலைக் காவலர் ரவி ஆகியோர் ரயிலில் தவறவிட்ட பேக்கை பாதுகாப்பாக எடுத்துவைத்தனர்.
பின்னர் பேக்கை தவறவிட்டவர்களுக்குத் தகவல் சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேக்கில் இருந்த மொத்தம் 18 பவுன் தங்க நகைகளைச் சரி பார்த்து உரியவர்களிடம் சார்பு ஆய்வாளர் விஜயன் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நகையைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...