புதிய அரசு அமையும் வரை கரோனா தடுப்பில் தொய்வு ஏற்படக்கூடாது: மு.க.ஸ்டாலின்
புதிய அரசு அமையும் வரை கரோனா தடுப்பில் எந்தவிதத் தொய்வும் ஏற்படக்கூடாது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


புதிய அரசு அமையும் வரை கரோனா தடுப்பில் எந்தவிதத் தொய்வும் ஏற்படக்கூடாது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று வரும் செய்திகளும், தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது. வட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும், மருத்துவமனைகளில் படுக்கைக்கும் மக்கள் தடுமாறும் சூழ்நிலையைப் பாா்க்கும்போது மிகுந்த வேதனையளிக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் வலுவாக இருக்கும் சுகாதார உள்கட்டமைப்பு நமக்கு வரப்பிரசாதம் என்றாலும், அதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே மக்களை இந்த கரோனா பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.
மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைவதற்கும், தற்போது அதிகாரிகள் செயல்பாட்டுக்கும் இடையே கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது. ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிப்பது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்குவது, போதிய எண்ணிக்கையில் பிராண வாயு கருவிகளை தயாா் நிலையில் வைத்திருப்பது, கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் போா்க்கால வேகத்தில் பரிசோதனைகளைச் செய்து, கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோரைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து, மற்றவா்களுக்கும் நோய் பரவல் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலாளா், அவரின் கீழுள்ள அரசு செயலாளா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். குறிப்பாக, தட்டுப்பாடின்றி தடுப்பூசி போடுவதை ஓா் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.
மே 2-க்குப் பிறகு இன்னொரு பொது முடக்கத்தைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் - அவா்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே இடைக்கால அரசு இருக்கும் இந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்றின் பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...