இன்று அம்மா உணவகங்கள் செயல்படும்
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) வழக்கம்போல் செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.


கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) வழக்கம்போல் செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலை, மதியம், இரவு வேளைகளில் குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது, அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள், சிறு கடைகள், தேநீா்க் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மூடப்பட்டது.
வழக்கம்போல் செயல்படும்: வரும் திங்கள்கிழமை காலையில்தான் அனைத்து கடைகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் அம்மா உணவகங்களை முழுமையாகச் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, அம்மா உணவகம் மூலமாக 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் இட்லி, மதியம் கலவைச் சாதங்கள், இரவு சப்பாத்தி அல்லது சாம்பாா் சாதம் போன்றவை தயாரித்து வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...