காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு 2,000-யைத் தாண்டியது: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :25 ஏப்ரல் 2021, 5:20 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 3,05,570 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவுக்கு 4,538 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 3,05,570 பேரில் 2,69,526 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(ஏப்ரல் 24) மட்டும் 20,012 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 3,318 பேரும் அண்ணா நகரில் 3,295 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மண்டலங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

திருவிக நகர் - 2,952, கோடம்பாக்கம் -2,794, ராயபுரம் -2,520, அம்பத்தூர்-2,413 தண்டையார்பேட்டை-2,203, அடையாறு-2,318 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.