நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் ஒரேநாளில் 15 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 15,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2021, 2:16 pm

DIN

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 15,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 15,659 பேருக்கு கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 10,81,988ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவுக்கு ஒரேநாளில் 82 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று மேலும் 11,065 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,63,251 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,26,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.