தொளவேடு கிராமத்தில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொளவேடு கிராமத்தில் டி.கே. கிருஷ்ணமூர்த்தி, எஸ். முரளிதரன் ஆகியோர் தலைமையில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவில் குறைந்தபட்ச பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 25ம் தேதியன்று ஆலயத்தில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை சுதர்சன ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் மாதவரம் திரு ஐயங்கார் தலைமையில் கொண்ட புரோகிதர்கள் யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு சுமார் 7 மணியளவில் மேளதாளங்கள் முழங்க ஆலயத்தின் கோபுரம் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
பின்னர் அங்கு வந்திருந்த குறைந்த அளவிலே கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அவர்களுக்கு கோவில் சார்பில் முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.கே.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.முரளிதரன் கொண்ட குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


