மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு: திமுக தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்தல் ஆணையம் விளக்கமளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்

சென்னை உயர்நீதிமன்றம்

Published On :


சென்னை: கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்தல் ஆணையம் விளக்கமளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதுக்குகு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் மொத்தம் 1833. இவற்றில் 1761 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த வாக்குகள் தேர்தல் விதிமுறைகளின்படி பதிவு செய்யப்படவில்லை. தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளிப்படையாக வாங்கிச் சென்றுள்ளனர். அப்படி வாங்கும் தபால் வாக்குகளை அங்கேயே கையெழுத்திட்டு மடித்து வைக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று கையெழுத்திட்டு மடித்து சீல் வைத்துள்ளனர். எனவே, இந்த தபால் வாக்குகளை செல்லாத வாக்காக மாற்றவும், குறிப்பிட்ட நபருக்கு  வாக்களிக்கவும் வாய்ப்புள்ளது.தபால் வாக்குகளில் முறைகேடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அப்போது  தேர்தல் ஆணையம் தரப்பில்  இந்த மனு தொடர்பாக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி விளக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.