மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு

தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இன்று வெளியாகியிருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 4:10 pm

DIN

தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இன்று வெளியாகியிருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளனன. அதில் அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. 

டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு
திமுக: 160-172
அதிமுக: 58-70
அமமுக: 0-4
மக்கள் நீதி மய்யம்: -
நாம் தமிழர்: -

ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு
திமுக: 160-170
அதிமுக: 58-68
அமமுக: 4-6
மக்கள் நீதி மய்யம்: 0-2
நாம் தமிழர்: -

இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு
திமுக: 175-195
அதிமுக: 38-54
அமமுக: 1-2
மக்கள் நீதி மய்யம்: 0-2
மற்றவை: -

இந்தியா ஹெட் கருத்துக்கணிப்பு
திமுக: 165-190
அதிமுக: 40-65
அமமுக: 1-3
மக்கள் நீதி மய்யம்: 1-3
மற்றவை:

ஏபிபி-சிவோட்டர் கருத்துக் கணிப்பு
திமுக: 160-172
அதிமுக: 58-70
அமமுக: 0-4
மக்கள் நீதி மய்யம்: -
மற்றவை: -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.