கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு: அ.தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

தமிழகத்தில் கரோனோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க.வினர் கரோனோ தொற்றைத் தடுக்க பொது மக்களுக்கு உதவ வேண்டும் என அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:41 am

DIN

தமிழகத்தில் கரோனோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க.வினர் கரோனோ தொற்றைத் தடுக்க பொது மக்களுக்கு உதவ வேண்டும் என அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்குத் தேவையான முக கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர  குடிநீர் உள்ளிட்டவற்றை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க  சார்பில் பெரிய சேமூர் பகுதிக்குட்பட்ட மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட், சீனாங்காடு, மாணிக்கம் பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொது மக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, கோவிந்தராஜன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.