தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா 3வது அலை தொடங்கிவிட்டது: மக்கள் ஒத்துழைப்பு தேவை - திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டது, எனவே அதனைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்  என மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 9:05 am

DIN

திருச்சி: கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டது, எனவே அதனைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம், அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சார்பில், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கரோனா விழிப்புணர்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவத் துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா 3 ஆவது அலை தொடங்கிவிட்டது. முதலாவது அலையின்போது பொதுமக்களிடம் இருந்த பாதுகாப்பு உணர்வு தற்போது குறைந்துள்ளது.

கோயில்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை. இதனால் பாதிப்பு உயரும் என கருதப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, கோயில்களில் அதிகளவு கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தும்விதமாக,  திருச்சி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகம விதிமுறைகளின்படி அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சார்பில் பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.  அதேபோல காவிரி கரையிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா மேலும் உயராமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். குறைந்தபட்சம்  இன்னும் 6 மாத காலத்திற்கு முகக்கவசம் அணியவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.