தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரையில், அரசாணை எண் 107-இன் படி, 10, 12-ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் முறையாகப் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களின் சான்றிதழ்கள், பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் போலவே செல்லுபடியாகும். அரசாணை 242-இன் படி, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லுபடியாகும் என அதில் தெரிவித்துள்ளாா்.