தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேருந்தில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.

News image
அமைச்சர் ராஜகண்ணப்பன் (கோப்புப்படம்)
Updated On :3 ஆகஸ்ட் 2021, 6:25 am

DIN

பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.

மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் எனக் கூறிவிட்டு, ரூ. 5-க்கு விற்கப்பட்ட பயணச்சீட்டை ரூ. 10ஆக உயர்த்தி ஆண்களிடம் வசூல் செய்யப்படுவதாக அதிமுகவின் ஓபிஎஸ் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “ஓபிஎஸ் சொல்வதை போல அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யவில்லை. ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது.

மேலும், இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.