ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூத்தாநல்லூர்: மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 10:40 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மாற்றுத்திறனாகளுக்கான அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை சேர்ப்பதற்கான முகாம், கூத்தாநல்லூர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டாட்சியர் என்.கவிதா தலைமை வகித்தார்.

மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் முன்னிலை வகித்தார். முகாமை வட்டாட்சியர் என்.கவிதா தொடங்கி வைத்து பேசியது: திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடத்தப்படும் முகாமில், 55 கிராமத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உள்ளனர்.

கூத்தாநல்லூர் வட்டத்தில், வடபாதிமங்கலம் பிர்கா, கமலாபுரம் பிர்கா மற்றும் கூத்தாநல்லூர் பிர்கா உள்ளிட்ட 3 பிர்காவிலும், 55 கிராமங்களிலிருந்தும் 325 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் வணங்கக் கூடியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த இந்த அடையாள அட்டை பெரும் பயனுள்ளதாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டையைப் பெற்ற பிறகு, மத்திய அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று பயனடையலாம் என்றார். முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலக கணினி தரவு உள்ளீட்டாளர் (டாடா என்ட்ரீ) ஆதித்யா, நடமாடும் பிசியோ தெரபி வாகன உதவியாளர் ராஜ கணேஷ், மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் பயிற்சியாளர்கள் அனுராதா,பாபு, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.