ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்': எம்.பி., ஆட்சியர் தொடக்கிவைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி. மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:50 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி. மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்.

தமிழகத்தில் 'மக்களைத்தேடி மருத்துவம்' என்ற புதிய மருத்துவ சிகிச்சை திட்டத்தை தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கொடைக்கல் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

துவக்க விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவர் அசோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள், மருத்துவத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.