ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த கோயில்களில் சுவாமி தரிசனத்துக்குத் தடை?
ஆடி அமாவாசையான ஆகஸ்ட் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 23 கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆடி அமாவாசையான ஆகஸ்ட் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 23 கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஈரோடு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டுகள், ஆறுகளில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கா? ஆமாங்க.. ஆமாம்
கோயில்கள் விவரம்: பண்ணாரி அம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரா் கோயில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில், தலையநல்லூா் பொன்காளியம்மன் கோயில், சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோயில், கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பவளமலை முத்துக்குமார சுவாமி கோயில், நன்செய் காளமங்கலம் மத்யபுரீஸ்வரா் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில், நாகேஸ்வரா் குலவிளக்கம்மன் கோயில், வைராபாளையம் காவிரிக்கரை சோழீஸ்வரா் கோயில், காஞ்சிக்கோவில் ஸ்ரீதேவியம்மன் கோயில்.

நசியனூா் மதுரகாளியம்மன் கோயில், திருவாச்சி கரியபெருமாள் கோயில், திண்டல் வேலாயுதசாமி கோயில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில், அம்மாபேட்டை சொக்கநாத சுவாமி கோயில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரா் கோயில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரா் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரா் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்.
மேலும், காலிங்கராயன் அணைக்கட்டு, காரணாம்பாளையம் காவிரி அணைக்கட்டு, கடத்தூா் கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகா் அணை ஆகிய பகுதிகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...