
ஓசூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒசூர் மாநகர திமுக சார்பில் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு ஒசூர் மாநகர திமுக சார்பில் நினைவஞ்சலி இன்று செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதில் ஒசூர் மாநகர பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏ எஸ்ஏ சத்யா தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் சின்னப்பிள்ளை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து காமராஜர் காலனி மாவட்ட செயலாளர் ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ எஸ் ஏ சத்யா ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து ராயக்கோட்டை சாலை ராகவேந்திரா கோவில் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.