தமிழகத்தில் புதிதாக 1,893 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,893 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 1,893 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 1,50,868 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிதாக 1,893 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,79,130 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,930 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 25,24,400 பேர் குணமடைந்துள்ளனர். 34,367 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 20,363 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம்:
அதிகபட்சமாக கோவையில் 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 209 பேரும், ஈரோட்டில் 169 பேரும், செங்கல்பட்டில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...