மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வைகை அணையில் அமைச்சர்களை சூழ்ந்த தேனீக்கள்!

வைகை அணையில் புதன் கிழமை தண்ணீர் திறப்பின் போது மதகு இடுக்கில் இருந்த தேன் கூடுகள் கலைந்து வெளியேறிய தேனீக்கள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சூழ்ந்தது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2021, 7:34 am

DIN


வைகை அணையில் புதன் கிழமை தண்ணீர் திறப்பின் போது மதகு இடுக்கில் இருந்த தேன் கூடுகள் கலைந்து வெளியேறிய தேனீக்கள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சூழ்ந்தது.

வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஒருபோக நெல் சாகுபடிக்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பணன், வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

அணையில் முதலாவது மடையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, அதனையடுத்த மதகுகளின் இடுக்கில் கட்டியிருந்த தேன் கூடுகள் கலைந்தது. இதில் தேனீக்கள் வெளியேறி மதகு பகுதியில் நின்றிருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களை சூழ்ந்தது. இதனால் மதகு பகுதியிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தேனீக்கள் தாக்கியதில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் என 7 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயமடந்த தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரனுக்கு வைகை அணை பயணியர் மாளிகையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மதகு பகுதியில் தேன் கூடுகள் கலைந்ததையடுத்து இரண்டு மதகுகள் மூலமாக மட்டும் வினாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.